காத்தான்குடி - 165 கிராம உத்தியோகத்தர் பிரிவில் சமுர்த்தி பயனாளிகளுக்கும், சமுர்த்தி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்குமான 5000/= கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயசிறீதர் கலந்துகொண்டு உரையாற்றுகையில் நாட்டின் தற்போதய நெருக்கடி மற்றும் உணவுத்தட்டுபாடு போன்றன மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே இந்த சவாலை எதிர்கொள்ள தங்களால் இயன்ற பயிர்களை பயிரிட்டு வர இருக்கின்ற பஞ்சத்தை அனைவரும் இணைந்து வெற்றிகொள்ள செயற்படவேண்டும் என கேட்டுகொண்டதுடன் பயனாளிகளுக்கான கொடுப்பனவினையும் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், சமுர்த்தி முகாமையாளர் எஸ்.எச்.முஸம்மில், கிராம உத்தியோகத்தர் சாதினா, பொருளாதார உத்தியோகத்தர் சத்யா, மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.