சீரடி சாய்பாபா அறப்பணி மன்றத்தினால்உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு!

 

மட்டக்களப்பு சீரடி சாய்பாபா அறப்பணி மன்றத்தினால் வசதிகுறைந்த மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா அறப்பணி மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சொறுவாமுனை கிராமத்தில் வசதிகுறைந்த 40 குடும்பங்களுக்கும், விளாவட்டுவான் கிராமத்தில் வசதிகுறைந்த 80 குடும்பங்களுக்குமாக மொத்தம் 120 உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு கடந்த 29.04.2022 ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சீரடி சாய்பாபா அறப்பணி மன்றத்தின் இணைப்பாளர்களான திரு.லோ.தீபாகரன், திரு.நே.பிருந்தாபன் ஆகியோர் நேரடியாக சென்று இவ் உலர் உணவுப்பொதிகளை வழங்கிவைத்தனர். இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் கௌரவ. செ.சண்முகராஜா, விளாவட்டுவான் கிராம முன்னேற்ற சங்க தலைவர் திரு.திலீபன், செயலாளர் திரு.தயாரூபன், சமூக ஆர்வலரும், அதிபருமான திரு.கோபாலபிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் பாதிப்படைந்து இன்னலுறும் மக்களை இனம்கண்டு இவ் உலர் உணவுப்பொதிகள் மட்டக்களப்பு சீரடி சாய்பாபா அறப்பணி மன்றத்தின் ஸ்தாபகர் திரு. மயில்வாகனம் யோகவேள் அவர்களில் நிதி உதவியின் கீழ் வழங்கிவைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.