திருகோணமலை- கிண்ணியாவில் முதலாவது டெங்கு மரணம்!!


மே மாதம் 18ம் திகதி முதல் 22ம் திகதி வரை நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருகோணமலையின் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முதலாவது டெங்கு மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் திருகோணமலையின் பல M O H பிரிவில் அதிகமான டெங்கு நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி விசேட அறிவித்தல் ஒன்றிணை மக்களுக்கு விடுத்துள்ளார்.

இதில்,

நாளைய தினத்தில் இருந்து சுகாதார துறையினர், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து வீட்டுக்கு வீடு கள பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனர்.

எனவே தயவுசெய்து தினமும் சிறிது நேரம் ஒதுக்கி வீட்டின் உற்புறம் மற்றும் சுற்றுப்புறங்களில் நுளம்பு பெருகும் சாத்தியமான இடங்களை சுத்தம் செய்வதுகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அநேக வீடுகளின் வீட்டின் உட்பகுதியில் பின்வரும் இடங்களில் அதிகமான நுளம்பு குடம்பிகள் அவதானிக்கப்பட்டுள்ளன,

1)குளிர்சாதனப் பெட்டியின் பிற்பக்க நீர் தேங்கும் பகுதிகள்.

2)சமயலறையின் சிங் (sink) இன் கீழ்பக்க பகுதிகள்.

3)கூரையிலிருந்து கசிந்து வரும் மழைநீரை சேகரிக்க வைக்கும் பாத்திரங்கள்.

4)குளியலறையில் நீர் சேகரித்துவைக்க பாவிக்கப்படும் வாளிகள்.

5)நீர் தேங்கிநிற்கும் பூச்சாடிகள்.

மேற்குறிப்பிட்ட இடங்களில் அதிக அவதானம் செலுத்தி நுளம்புகள் பெருக இடமளிக்காமல் சுத்தம் செய்துகொள்ளுமாறும் சுத்தம் செய்ய தவரும் பட்சத்தில் உரிமையாளருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.