வி.சுகிர்தகுமார்
ஒன்றிணைந்து எமது குடும்பத்தினதும் நாட்டினதும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் எனும் அரசாங்கத்தின் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் விரைவான உணவு உற்பத்தி செயற்பாடுகள் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திகாமடுல்லவில் உணவு பாதுகாப்பை ஏற்படுத்தல் எனும் கருப்பொருளுக்கமைவாக இத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு சமுர்த்தி; கருத்திட்ட பிரிவின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட இவ்வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் கலந்து கொண்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் திட்ட முகாமையாளர் வ.சத்தியப்பிரியன் கிராம உத்தியோகத்தர் நிதர்ஷன் அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.நிப்றாஸ் சமுர்த்தி உத்தியோகத்தர் கே.யுகவதனி மற்றும் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது விரைவான உணவு உற்பத்தி செயற்பாடுகளுக்கு அமைவாக மரவள்ளி நடுகை இடம்பெற்றதுடன் பாசிப்பயறு நடுகைக்கான விதைகளும் வழங்கி வைக்கப்பட்டது.