மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் வாகரையில் மைதானம் புனரமைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பால்சேனை விளையாட்டு மைதானம் மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் இன்று புனரமைக்கப்பட்டது.

வாகரைப்பிரதேசத்தில் புச்சாக்கேணி பால்ச்சேனை விஷ்ணு ஆலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதான புனரமைப்பு தொடர்பாக கலா விளையாட்டு கழகத்தினரால் மறத்தமிழர் கட்சி வாகரைப்பிராந்திய அமைப்பாளர் பாலச்சந்திரனிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்த மைதானம் புனரமைக்கப்பட்டுள்ளது.

மறத்தமிழர் கட்சியின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் வாகரையில் மைதான புனரமைப்பு பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வில் மறத்தமிழர் கட்சி வாகரைப்பிராந்திய அமைப்பாளர் பாலச்சந்திரன் மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.