நாளையில் இருந்து மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு!!


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு இலங்கை மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.