கிழக்கில் நாளை பாடசாலைகள் நடைபெறாது


நாடெங்கிலும் அமுல்படுத்தப்பட்டுவந்த ஊரடங்கு சட்டம் நாளை காலை 07.00மணியளவில் நீக்கப்படும் நிலையில் கிழக்கு மாகாண பாடசாலைகளை நடாத்துவது சாத்தியமற்றது என கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரான போக்குவரத்துவசதிகள் இல்லாத காரணத்தினால் பாடசாலைகளை நடாத்துவது சாத்தியமற்றது என்பதனால் பாடசாலைகளை நடாத்தமுடியாத நிலையுள்ளதனால் பாடசாலைகளை நாளைய தினம் நடாத்தவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.

இது தொடர்பான அறிவிப்புகள் வலய கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.