கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் க.பொ.த.ச.தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இறை ஆசி வேண்டி விசேட பூசை!

 

இம்முறை க.பொ.த.ச.தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இறை ஆசி வேண்டும் விசேட பூசை வழிபாடுகள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை (21.05.2022) இடம்பெற்றது. 

 மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி அ.தயாசீலன் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையுடன், மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இவ் நிகழ்வு நடைபெற்றது.

 இந் நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்கள் பூசைவழிபாடுகளில் ஈடுபட்டதுடன் எம்பெருமானின் பாதத்தில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்ட எழுதுகருவிகளையும் (பேனை) பெற்றுக்கொண்டனர்.