கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டான்சேனை தேவாபுரம் வாசிகசாலைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன் ஐயா அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் 300 புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மதிப்புக்குரிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஐயா வடகிழக்கு வாலிபர் முன்னணி தலைவர் சேயோன் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் பகீரதன் வாலிப முன்னணி இணைப்பாளர் நவதீபன் இளஞ்சுடர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் வட்டார கிளை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்









