தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் குரல் “கோட்டா கோ கம“வில் நேற்றிரவு ஒலித்துள்ளது.
காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) 14ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இந்தநிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் குரல் “கோட்டா கோ கம“வில் நேற்றிரவு ஒலித்துள்ளது.
ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் நேற்று முந்தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது, இரா.சாணக்கியன் கடும் கண்டனங்களை வெளியிட்டிருந்தார்.
அத்துடன், அரசாங்கத்தின் தவறுகளையும் அவர் அன்றைய தினம் சுட்டிக்காட்டி உரையாற்றியிருந்தார்.
இந்தநிலையில் அவரது நாடாளுமன்ற உரை நேற்றிரவு “கோட்டா கோ கம“வில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான கருத்துக்கள் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், “கோட்டா கோ கம“வில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.