கிழக்கு மாகாண சபைக்கு சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட உயிரியல் பொறியியலாளர்கள் மற்றும் தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் தலைமையில் இன்று (06) திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
25 தாதியர்கள் மற்றும் இரண்டு உயிரியல் பொறியாளர்கள் ஆளுநரால் நியமிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் பேசுகையில், நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் சேவை செய்ய அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும்.
இலவசக் கல்வியினால் வழங்கப்படும் இந்த நியமனத்தை ஒரு வேலையாக மட்டும் கருதக் கூடாது என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
உலகின் பல நாடுகளில் இலவசக் கல்வி வழங்கப்படுவதில்லை என்றும் மக்கள் செலவில் நியமிக்கப்பட்டுள்ள நீங்கள், தன்னிடம் வரும் நோயாளிகளை தாய், தந்தையாக நடத்த வேண்டும் என்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தாதியர்கள் முன்னிலையில் ஆளுநர் வலியுறுத்தினார்.
இதன்போது மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. முரளிதரன், மாகாண கல்விச் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக்க, மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.கோபாலரட்ணம், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.