மட்டக்களப்பு மென்ரசா வீதியிலுள்ள சீயோன் தேவலாயத்தில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை இன்று ஞாயிற்றுக்கிழமை (17) போதகர் ரொசான் மகேசன் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியிலுள்ள மென்ரசா வீதியில் புதிதாக சீயொன் தேவாலயம் அமைக்கப்பட்டு அங்கு இன்று உயிர்த ஞாயிறு விசேட ஆராதரனையில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு ஆராதரனையில் ஈடுபட்டனர்.
கடந்த 2019ம் ஆண்டு ஏப்பிரல் 21 ம் திகதி சீயோன் தேவலாயத்தில் உயித்த ஞாயிறு தினத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஸாரான் காசீம் தலைமையிலான தற்கொலை குண்டு தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததுடன் 93 பேர் படுகாயமடைந்ததுடன் தேவலாயம் பாதிப்படைந்து இன்று 3 வருடங்கள் நிறைவடைந்துள்ளதுடன் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சாந்திவேண்டி ஆராதரனையில் ஈடுபட்டனர்.
இதேவேளை இந்த உயிர்த்த ஞாயிறு ஆராதரனையிட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.