கல்லடி- வேலூர் கதிர்காமத்தம்பி வீதி தார் வீதியாகமாநகர சபையால் புணரமைப்பு!!


2021 பாதீட்டின் கீழ் நிதி ஒதுக்கப்பட்ட கல்லடி- வேலூர் கதிர்காமத்தம்பி வீதிக்கான தார் இடும் பணிகள் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் மேற்பார்வையில் இன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த வீதியானது வேலூர் காளியம்மன் ஆலய வீதியையும், புதிய கல்முனை பிரதான வீதியையும் இணைக்கும் வீதியாகும். இது நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் இருந்த நிலையில் வீதியால் பயணிக்கும் மக்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகி இருந்தனர். மழை காலங்களில் நீர் தேங்கி பயணிக்க முடியாத நிலை காணப்பட்ட நிலையில்  தற்போது மாநகர சபையால் குறித்த வீதியானது செப்பனிடப்பட்டு பொதுமக்கள் பாவனைக்கு உகந்ததாக மாற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிருவாக மாற்றத்திற்கு பின்னர் மட்டக்களப்பு மாநகர சபையின் அபிவிருத்தி திட்டப் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ரதாக  முதல்வர் தெரிவித்துள்ளார்.