வாகரையில் சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு தோனி ஓட்டப்போட்டி!!


மட்டக்களப்பு- வாகரைப் பிரதேசத்தில் சித்திரை வருடத்தை முன்னிட்டு ஆண், பெண் இருபலாருக்குமான தோனி ஓட்டப்போட்டி நேற்று (12) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

வி.லவகுமார் தலைமையில் தோனி ஓட்டப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிவகுரு ஆதின முதல்வர் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தவத்திரு வேலன் சுவாமிகள், அருட்தந்தை க.ஜெகதாஸ் தென்கையிலை ஆதின முதல்வர் தவத்திரு அகத்தியர் அடியார், தென்கையிலை ஆதின திருமூலர் தம்பிராசா சுவாமி, அருட்தந்தை செ பிறின்சன், இத்தோனி ஓட்ட போட்டியை கண்டு கழிப்பதற்காக வருகை தந்திருந்தனர்.

கிராமத்தின் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பணப்பரிசு வழங்கிவைக்கப்பட்டது.