இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஆய்வுகூட முகாமையாளர் நளின் சந்திரசிறி, CPC களஞ்சியசாலைகளில் இருந்து வெளியிடப்படும் எரிபொருள் தேவையான தரத்தில் இருக்கும் என்று தெரிவித்தார்.
தரமற்ற எரிபொருள் சந்தைக்கு வெளியிடப் பட்டுள்ளதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஊடகவிய லாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்த் தாங்கிகளின் எண்ணெய் மாதிரிகள் நான்கு தடவைகள் பரிசோதிக்கப் படுவதாகவும், இந்தப் பரிசோதனைகள் ஓர் ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு கப்பலிலுள்ள எரிபொருள் தரமற்றது எனக் கண்டறியப்பட்டால் அவ்வாறான எரிபொருள் இருப்புகளை நிராகரிப்பதற்கு கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.