மட்டக்களப்பு பாவகோடிச்சேனையில் உள்ள மாணவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!!


சுவிஸ்லாந்தில் வாசிக்கவும் சிவா அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நிதி உதவியுடன் சுமார் 100 மாணவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

புலம்பெயர் நாடுகளில் உள்ள சமூக ஊடக செயற்பாட்டாளர்களான தமிழ் இளைஞர்களினால் உருவாக்கப்பட்டுள்ள "வணக்கம் வாழ்க தமிழ்"'அமைப்பின் ஊடாக இன்று (30) வறுமைக் கோட்டின் கீழ் வாழும் கூலித் தொழிலாளிகளின் குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வணக்கம் வாழ்க தமிழ்'அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் மற்றும் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் பிரவீன் மற்றும் ஜனா ஆகியோரின் ஏற்பாட்டில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.