ஆலையடிவேம்பு வாச்சிக்குடா பிரிவில் வாழும் சிவலிங்கம் என்பவரது வீட்டில் உள்ள சாதாரண பச்சை நிறமுள்ள தேங்காய் விளையும் தென்னை மரமொன்றின் குலை ஒன்றில் மூன்று காய்கள் மட்டும் தெம்பிலி இளநீர் போன்று செவ்விளநீர் வர்ணத்தில் காய்த்துள்ளது.
மகரந்த சேர்க்கை அல்லது வேறு காரணங்களால் இவ்வாறு நடைபெற்றிருக்கலாம் என இதனை சாதாரண நிகழ்வாக நாம் பார்த்தாலும்; ஒரு குலையில் மாத்திரம் மூன்று காய்கள் மட்டும் செவ்விளநீர் போன்று காட்சி அளிக்கின்றமை அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 30 அடி உயரமான இந்த மரத்தில் ஏனைய காய்கள் யாவும் பச்சை நிறமாகவுள்ளதுடன் இதுவே இவ்வாறு நடைபெற்ற முதல் சந்தர்ப்பம் என தென்னை மரத்தின் உரிமையாளர் கூறுகின்றார்.
இது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவுள்ளதுடன் பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.