மட்டக்களப்பு- சந்திவெளி சித்தி விநாயகர் பாடசாலையில் சமூக சேவையாளருக்கு கௌரவம்!!


மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் சமூக நன்மதிப்பை பெற்றுவரும் சமூக சேவையாளரான வ.ரமேஸ் ஆனந்தனிற்கு சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் கடந்த 25.04.2022 திகதி சிறந்த சமூக சேவையாளருக்கான கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் பாடசாலை சார்ந்த அபிவிருத்தி வேலைகளிலும், மாணவர்களை நல்வழிப்படுத்துவதிலும் அயராது தமது பணியை ஆற்றிவருவதுடன் மாணிக்கவாசகர் சிறுவர் இல்லத்தின் முகாமையாளராக செயற்பட்டு வருவது மட்டுமன்றி சமாதான நீதவானும் திடீர் மரண விசாரனை அதிகாரியாகவும் கடமையாற்றி தான் சார்ந்த சமூகத்திற்காக பாரிய சேவையினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது இவரது அயராத சமூக சேவையை பாராட்டி பாடசாலை அதிபர் எம்.சிவசுந்தரம் தலைமையில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன், இவரிற்கான கௌரவமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலையின் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.