கொழும்பு 15, மோதரை, வில்பிரட் லேன் பகுதியிலுள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் கடந்த வியாழக்கிழமை சுமார் ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான 80 பவுண் நகை மற்றும் 10 லட்சம் ரூபா பணம் என்பன கொள்ளையிடப் பட்டுள்ளதாக மோதரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தொழிலதிபரின் மூன்று பிள்ளைகளில் இரு பிள்ளைகள் திருமணம் முடித்துள்ளனர்.
முதல் பிளை்ளைக்கு சில மாதங்களுக்கு முன்னரும் இரண்டாவது பிள்ளைக்கு கடந்த வியாழனன்றும் திருமணம் நடைபெற்றது.
கடந்த வியாழக்கிழமை திருமண நிகழ்வுக்கு அனைவரும் சென்றிருந்த வேளை வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்து உள்ளே சென்று 80 பவுண் நகை மற்றும் 10 லட்சம் ரூபா பணம் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளளனர்.
இந்த நகை மற்றும் பணத்தை திருமணம் முடித்துள்ள மகள்களுக்கு வழங்கவென வங்கியிலிருந்து மீட்டு வீட்டில் வைத்திருந்த நிலையிலேயே கொள்ளையிடப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது வீட்டிலுள்ள அனைவரும் திருமணத்துக்குச் சென்றிருந்த துடன் வீட்டு வளர்ப்பு நாயும் சுகவீனமுற்ற நிலையிலேயே மீட்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் மோதரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.