இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாக சுகாதார அமைச்சரான பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவால் வழங்கப்பட்ட 340 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் ஒரு வாரத்துக்குள் வரும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, 186 அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 19.02 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதற்கேற்ப மருந்துப் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவின் மத்திய களஞ்சியசாலையில் இரண்டு உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் 148 அத்தியாவசிய மருந்துகள் உட்பட பல மருந்துகளுக்கு தட்டுப் பாடு நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.