இலங்கையின் மிக உயரமான சுதை விக்கிரக 64 அடி உயர இராஜகோhபுரத்தினையுடைய மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் பிரமோற்வசவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை செட்டிபாளையம் ஸ்ரீ நித்தியானந்த சிவசுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து கொடியேற்றத்துக்கான கொடிசீலை எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றது.
மூலமூர்த்திக்கு விசேட ஹோமம்,அபிசேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் வசந்த மண்டப பூஜையும் நடைபெற்று கொடிச்சீலை ஊர்வலமாக கொடித்தம்பத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆலயத்தின் மூலமூர்த்திக்கு விசேம அபிசேக ஆராதகைள் நடைபெற்றதுடன் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று வேதபாராயணம்,மேள,நாதஸ்வர இசை முழங்க,பக்தர்களின் ஆரோகரா கோசத்திற்கு மத்தியில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.மோஹனாநந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் மஹோற்சவம் சிறப்பாக நடாத்தப்பட்டுவருகின்றது.
பத்து தினங்கள் நடைபெறும் மஹோற்சவத்தில் தினமும் விசேட யாகாரம்பம் மூலமூர்த்தி அலங்கரபூஜை,தம்ப பூஜை,வசந்த மண்டப அலங்காரபூஜை,சுவாமி உள்வீதி வெளி வீதி வருதல் ஆகியன இடம் பெறும்.
பிரமோற்வசவ திருவிழா காலங்களில் புஸ்பாஞ்சலி திருவிழா, கர்ப்பூரஜோதித்திருவிழா,சதுர்வேதகோஷத்திருவிழா, பஞ்சமுக அர்ச்சனை திருவிழா, திராவிடதோத்திர விழாவும் மாம்பழத்திருவிழாவும், வேட்டைத்திருவிழா இடம் பெறவுள்ளது
ஒன்பதாம் நாள் சப்பரத்திருவிழாவும் இடம் பெற்று பத்தாம் நாளாகிய சித்திரா பௌணமியன்று தீர்த்தோற்சவமும்;;; தீர்த்தோற்சவத்தின் போது அடியார்கள் பீதிர்கடன் செய்யக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அன்றைய தினம் மாலை கொடியிறக்கமும் இடம் பெறவுள்ளது. மேலும் பூங்காவன திருவிழா மற்றும் பைரவர் பூஜையும் இடம் பெறும் என ஆலய பரிபாலன சபை தலைவர் த.விமலானந்தராஜா தெரிவித்தார்.