நீண்ட காலமாக சேதமடைந்து மணல் வீதியாக காணப்பட்ட கல்லடி உப்போடை திருமகள் வீதி மேற்கில் 130m நீளமான பகுதிக்கான வீதி செப்பனிடும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த வீதியில் புதிதாக புனருத்தாரனம் செய்யப்பட்டு அமையப்பெற்ற புளியடி விநாயகர் ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்கள் எதிர் நோக்கும் சிரமத்தினை தவிர்க்கும் வண்ணமும் மழைகாலங்களில் சேதமடைந்த குறித்த வீதியினூடாக பயணிப்பதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக 14ஆம் வட்டார உறுப்பினர் தி.சிறீஸ்கந்தராஜா அவர்களிடம் பிரதேச மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அவரினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த வீதி திருத்த வேலைக்கான முன்மொழிவுக்கு இணங்க மாநகரசபையின் 2021 ம் ஆண்டு பாதீட்டுக்கு அமைவாக குறித்த வீதி திருத்த வேலைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர்கள் தி.சிறிஸ்கந்தராஜா , சி.ஜெயேந்திரகுமார் , மாநகர சபை தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தர்கள் ஆலய பிரதிநிதிகள் , பிரதேச மக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.