டிப்பர் மற்றும் கார் மோதி விபத்து- காரில் பயணித்த இருவர் மரணம்...!!


திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காரின் சாரதி உட்பட இருவர் உயிரிழந்துள்ளார்.

றத்மலை பகுதியிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லொறியும் ஹொரவ்பொத்தானையிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது.

காரில் பயணித்த இருவர் உயிரிழந்த நிலையில் யார் பற்றி விபரம் இன்னும் தெரியவில்லை எனவும் EP CAN-7158 என்ற இலக்க பயணித்தவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.