குமுக்கன் ஆற்றங்கரையில் 1,400 கிலோகிராம் எடையுள்ள மாபெரும் காளி அம்பாள் பிரதிஸ்டை


1,400 கிலோகிராம் எடையுள்ள மாபெரும் காளி அம்பாள் விக்கிரகமொன்று, கிழக்கின் தென்எல்லையிலுள்ள குமுக்கன் ஆற்றுப்படுக்கையிலுள்ள குமுக்கன் மடத்தடி அம்மன் கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டுள்ளது.

வன அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பில், அவர்களின் நேரடி வழிகாட்டலில், குமண சரணாலயத்தில் மாபெரும் சக்தி பீடமாக விளங்குகின்ற குமுக்கன் ஆற்றங்கரையின் மடத்தடி அம்மன் கோவிலில் மாபெரும்காளி தேவியின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சித்தர்களின் குரல் அமைப்பின் பிரதானி சிவசங்கர் ஜீ இதனை பிரதிஷ்டை செய்துவைத்தார்.

அவருக்கு உதவியாக இலங்கையின் சித்தர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன், துணைத் தலைவர் மனோகரன் சிவயோகி மகேஸ்வரன் ஸ்வாமிகள் உள்ளிட்ட பக்தர்கள் செயற்பட்டனர்.