கவிஞரும், பாடலாசிரியருமான"வியன்சீர்"யின் இந்த அந்தரக்கிளைகள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு

கவிஞரும், பாடலாசிரியருமான"வியன்சீர்" எழுதிய இந்த அந்தரக்கிளைகள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு தமிழ் சங்கத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மேனாள் மொழித்துறை தலைவர் பேராசிரியர் செ.யோகராஜா தலைமையில் இந்த நூல்வெளியீட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதிக்கல்வி பணிப்பாளருமான ஞானமுத்து சிறிநேசன் கலந்துகொள்ளுகின்றார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன்,மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரி விரிவுரையிணைப்பாளர் திருமதி த.சுந்தரராஜன் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

நூல்வெளியீட்டு நிகழ்வில் முதல் பிரதியினை தேசபந்து மு.செல்வராஜா பெற்றுக்கொள்ளவுள்ளதுடன் சிறப்பு பிரதியினை சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி பெற்றுக்கொள்கின்றார்.

நூல்வெளியீட்டில் நூல் ஆசிரியர் அறிமுகவுரையினை கவிஞர் அரசையூர் பகிரதனும் நூல் நயவுரையினை கவிஞர் மேராவும் நூல் ஏற்புரையினை நூல் ஆசிரியர் வியன்சீர் ஆகியோர் மேற்கொள்ளவுள்ளதுடன் தலைமையுரை,அதிதிகள் உரைகளும் நடைபெறவுள்ளன.

இந்த" அந்தரக்கிளைகள்"கவிதை நூல் பிறப்பு தொடக்கம் இறப்பு வரையில் மனிதன் தன்னகத்தே காணும்ஒவ்வொரு உணர்வுகளையும் மிகவும் துல்லியமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் எடுத்தியம்பியுள்ளதோடு மிகவும் உணர்வுபூர்வமாகவும் படைக்கப்பட்டுள்ளது.சமுகத்தின் எடுத்துரைப்புகளை வரிகளினூடாக வெளிக் கொணர்ந்தும், இந்த வையகத்தின் மனித ஜீவராசிகளின் அத்தனை உணர்வுகளுக்கும் மொத்தமாய் வகிடெடுத்துமுள்ளது.