(லக்சன்)
இலங்கை தமிழரசுகட்சி ஆயுள் கால உறுப்பினரும், மண்முனை வடக்கு இலங்கை்தமிழரசு கட்சி்தலைவரும், மட்டக்களப்பு மாநகர சபை தமிழ்தேசிய கூட்டமைப்பு வட்டார மக்கள் பிரதிநிதியும் மட்டக்களப்பு தமிழ்சங்கத்தின் செயலாளரும் கடந்த 2021,டிசம்பர்,11,ல் இறைபதம் அடைந்த அமரர் வே.தவராசா அவர்களின் நினைவு அஞ்சலி வணக்க நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (23/01/2022) மு.ப.10,மணிக்கு மட்டக்களப்பு தமிழ்சங்க மண்டபத்தில் அதன் தலைவர் சைவ புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் மறைந்த வே.தவராசா அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர் மாலையினை நிகழ்வின் தலைவர் ரஞ்சிதமூர்த்தி்அவர்களால் அணிவிக்கப்பட்டதுடன் இரண்டு்நிமிட அகவணக்கமும் மலரஞ்சலிகளும் நினைவுச்சுடர் ஏற்றலும் இடம்பெற்றது. தலைமை உரையினையும் வரவேற்புரையுனையும் நிகழ்வின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி் அமரர் வே.தவராசா அவர்களின் தமிழ் பற்று, தொடர்பாகவும் தமிழ்தேசியகொள்கை உறுதித்தன்மை தொடர்பாவும், மட்டக்களப்பு தமிழ்சங்கத்தில் அவர் ஆற்றிய பணிகள் தொடர்பாகவும் எடுத்துக்கூறினார். செயற்குழு உறுப்பினர் வே.அமிர்தலிலிங்கம் வே.தவராசாவின் கல்விப்பணிகள், மாணவர்கள் அவர்மூலம் பெற்ற பெறுபேறுகள் என்பவற்றை விரிவாக உரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் ச.தங்கராசா தவராசா அவர்களின் தமிழ் இலக்கிய செயல்பாடுகள் தொடர்பாகவும் தமிழ்மொழி பற்று தொடர்பாகவும் சொற்பெருக்கம் செய்தார். துணைச்செயலாளர் இ.பிரதீஷ்காந் தவராசா அவர்களின் கொள்கைசார்ந்த சமூகவாழ்வியல் தொடர்பாக அவர் இலங்கை தமிழரசு கட்சியின் ஊடாக தடம்மாறாமல் சாகும் வரை உறுதியுடன் செயல்பட்டு மக்களுக்கும் மண்ணுக்கும் ஆற்றிய சேவைகளை விபரித்தார். சைவப்புலவர் சிவானந்த ஜோதிஞானசூரியம் அவர்கள் அமரர் வே.தவராசாசாவின் நற்சேவைகளால் அவரின் ஆன்மா நற்கதியடையும் என்பதை இந்துமத தத்துவத்தின் ஊடாக வெளிக்கொணர்ந்தார். கலாபூசனம் கா.சிவலிங்கம் அவர்களால் கவிதாஞ்சலி மூலமாக மறைந்த வே.தவராசா அவர்களுக்கு கண்ணீர் மல்கும் வரிகளால் அனைவரையும் துயரஞ்சலியில் ஆழ்த்தினார். ஏற்புரையாக மறைந்த அமரர் வே.தவராசா அவர்களின் மகள் திருமதி தனுஷனா சுகந்தன் அவர்களால் தமது தந்தையாரின் மறைவையும், அவர் செய்த நற்சேவைகளையும், அவர் தமிழ்தேசிய அரசியலால் மக்கள் நன்மதிப்புடன் வாழ்ந்த வரலாறுகளையும் எடுத்து கூறி மட்டக்களப்பு தமிழ்சங்கம் நினைவு அஞ்சலி்செலுத்தியமை தமது குடும்பத்திற்கு ஆறுதல் அளிப்பதாக கூறி நன்றியையும் தெரிவித்தார். இறுதியாக நன்றியுரையுனை தமிழ்சங்கத்தின் துணைச்செயலாளர் திருமதி பிரிஜா கருணாகரனால் நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு தமிழ்சங்க உறுப்பினர்கள், மறைந்த வே.தவராசா அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என்பலரும் கலந்து கொண்டனர்.