கொழும்பு துறைமுக நகர மரினா பொதுமக்கள் நடைபாதை மற்றும் படகு முற்றம் திறப்பு...!!


கொழும்பு துறைமுக நகரில் நிர்மாணிக்கப்பட்ட மரினா பொதுமக்கள் நடைபாதை மற்றும் படகு முற்றம் ஆகியவை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கு விஜயம் செய்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோரின் அனுசரணையின் கீழ் இது திறந்து வைக்கப்பட்டது.

நாளை முதல் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

நடைபாதையின் நுழைவாயில் ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே அமைந்துள்ளது.