மட்டக்களப்பில் தகவல் தொடர்பாடல் உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சி நெறி...!!


மட்டக்களப்பில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் தகவல் தொடர்பாடல் உத்தியோகத்தர்களுக்கு மைக்ரோ செப்ட் அசூர் தொடர்பான அடிப்படை பயிற்சி நெறி மாவட்ட செயலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.

இப்பயிற்சி நெறியானது மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் இன்று (25) மாவட்ட செயலக தகவல் தொழினுட்டப நிலையத்தில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப்பயிற்சி நெறியின் முதற்கட்டமாக கடந்த இருவாரங்களுக்கு முன்னர் மாவட்ட செயலக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பிரிவு உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தத. இதன் அடுத்த கட்டமாகவே பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மைக்ரோ செப்ட் அசுரி தொடர்பான அடிப்படை பயிற்சி வழங்கப்படுகின்றது.

இப்பயிற்சி நெறியானது மைக்ரோ சொப்ட் பயிற்சியாளர்களின் ஆசிய பசுபிக் பிராந்திய தலைவர் எம். விக்னராஜின் மேற்பார்வையில் இடம்பெறுவதுடன் மைகெ;ரோ சொப்ட் நிறுவன அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர் விரிவுரைகள் இடம்பெறுகின்றன.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப உத்தியோகர்தர் திருமதி. லக்சிகா கதீசன், மைக்ரோ சொப்ட் நிறுவன அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர் எச். ஹட்சனா மற்றும் மாவட்ட செயலக, பிரதேச செயலக தகவல் தொடர்பாடல் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.