பெரிய கல்லாறு வலம்புரி விளையாட்டு கழகத்தின் அனுசரனையில் பெரிய கல்லாறு மெ.மி.த.க பாடசாலையின் பெயர் பலகை திறந்து வைப்பு.

 



(புருசோத்)
பெரிய கல்லாறு மெ.மி.த.க பாடசாலையின்யின் பெயர் பலகை திறக்கும் நிகழ்வு இன்று (3) பாடசாலையின் வழாகத்தில் இடம் பெற்றது. 

 பாடசாலையின் அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெயர் பலகைக்கு அனுசரனை வழங்கிய வலம்புரி விளையாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர் 

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் உரை நிகழ்த்துகயில் இந்த பாடசாலையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பெரிய கல்லாற்றில் இயங்கி வருகின்ற வலம்புரி விளையாட்டு கழகம் முன்வந்து பெயர் பலகையை அமைத்து தந்தமைக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவரது உரையில் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் வலம்புரி விளையாட்டு கழகத்தின் தலைவர் அல்மேதா பிறின்ஸ்லி வேணாட் அவர்கள் உரையாற்றுகையில் இந்த பாடசாலையின் நிகழும் குறைபாடுகளை தமது பெரிய கல்லாறு வலம்புரி விளையாட்டு கழகம் எதிர்காலத்தில் தமது வெளிநாட்டில் மற்றும் உள்நாட்டில் வாழும் கழக உறுப்பினர்களின் உதவியிடன் நிவர்த்தி செய்து தருவதாகவும் வாக்குறுதி வழங்கி உரையை நிறைவு செய்தார்



 









.