இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேமஜெயந்த நீக்கம்...!!


ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவை இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

இது குறித்த அறிவிப்வை இன்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி சுசில் பிரேம ஜயந்த தொலைநோக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.