மட்டக்களப்பு- வாழைச்சேனை கோழிக்கடை வீதியை சேர்ந்த சகோதரி ஒருவர் கடந்த 19ம் திகதி ஆயிஷா மஹாவித்தியாலயத்துக்கு ஒரு அலுவல் நிமித்தம் சென்று திரும்பிய போது வழியில் தனது எட்டு பவுன் எடையுள்ள தங்க நகையை தொலைத்துவிட்டார்.
இரண்டு நாளாக நகையை தேடி பல முயற்சிகள் செய்தும் அது கிடைக்கவில்லை.
அதே நாளில் அதே பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பெண்மணி குறிப்பிட்ட தங்க நகையை கண்டெடுத்துள்ளார்.
உரியவர் யார் என்று அறியும்வரை அதனை தன்வசம் வைத்திருந்து இன்று 21ம் திகதி நகையை தொலைத்தவரிடம் ஒப்படைத்துள்ளார்.
தொலைந்து போன நகை மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியிலும், அதனை கண்டெடுத்து கொடுத்தவரின் நல்லெண்ணெத்துக்காகவும் அவருக்கு ஒரு தங்க மோதிரத்தை பரிசாக கொடுத்தபோது அதனை அவர் வாங்க மறுத்துதுள்ளார்.