சீனாவின் நிவாரண உதவியின் கீழ், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் கலந்துரையாடல் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வர்த்தக அமைச்சும், நிதி அமைச்சும் இணைந்து, தற்போது முன்னுரிமை வழங்க வேண்டிய பொருட்கள் மற்றும் சேவைகளை அடையாளம் கண்டு, அவற்றை சீன அரசாங்கத்திடம் இருந்து நிவாரணமாக பெற்றுக்கொள்வதே இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.