அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு வழிபாட்டு நிகழ்வு

(வி.சுகிர்தகுமார்)

அம்பாரை மாவட்டத்தில் வாழும் மக்களும் நாடும் நாட்டு மக்களும் நலமுடன் வாழ பிரார்த்தனைகளில்; ஈடுபட்டதுடன் புத்தாண்டை வரவேற்கும் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் புதுவருடத்தை வரவேற்றனர்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புத்தாண்டு வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

அதிகமான தமிழ் மக்கள் இன்று அதிகாலை நீராடி புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன்; பாரம்பரிய நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் பக்தர்கள் கலந்து கொண்டு இறைவழிபாட்டில் கலந்து கொண்டனர்.

இறைவழிபாட்டில் ஈடுபட்ட மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டதுடன் பெரியோர்களின் ஆசியினையும் பெற்றுக்கொண்டனர்.

ஆலய தலைவர் வி.சுகிர்தகுமார் தலைமையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீP ப.கு.கேதீஸ்வரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.

இதன் பின்னர் ஆலயம் சென்ற அடியவர்கள் அனைவருக்கும் ஆலய பிரதமகுரு புதுவருட கைவிசேடத்தினையும் வழங்கி வைத்தார்.

இதேநேரம் வீதிகள் தோறும் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் பொங்கல் பூஜை வழிபாடுகளையும் மக்கள் மேற்கொண்டனர்.