அக்கறைபற்று கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் வெட்டு வாய்க்கால் காரைதீவு எல்லையில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இச்சம்பவம் இன்று 2022.01.01 மாலை சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது. இதன்போது கல்முனை நேக்கி வந்த முச்சக்கரை வண்டி (ஆட்டோ) மற்றும் அக்கறைப்பற்றை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது
இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் பயணித்த சிறுமியே படுகாயமடைந்தார்.