சித்தாண்டியில் எமக்காக நாம் அமைப்பினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

 

(லக்‌ஷன்)
எமக்காக நாம் உதவிடுவோம் வாரீர் மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளை நிலையத்தின் வேண்டுகோளை ஏற்று மட்டக்களப்பு சித்தாண்டி கிராமத்தில் தேவைப்பாடு உடைய 25 மாணவர்களுக்கு எமது எமக்காக நாம் அமைப்பின் ஊடாக கற்றல் உபகரணங்களை தலைவர் திரு தீபாகரன் மற்றும் அதன் இணைப்பாளர்கள் பிருந்தாவன் மற்றும் தரணிராஜ் அவர்களாலும் சிகண்டி அறக்கட்டளை நிலையத்தில் தலைவர் திரு முரளிதரன் செயலாளர் வேந்தன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன இந்நிகழ்வை சிகண்டி அறக்கட்டளை நிலையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒழுங்கமைத்து தந்தமை குறிப்பிடத்தக்கதாகும்