களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் 2022 ஆம் ஆண்டின் அலுவலக கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு


களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் மலர்ந்துள்ள 2022 ஆம் ஆண்டின் அலுவலக  செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.

தேசியக்கொடியேற்றும் ஏற்றும் நிகழ்வுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் தேசிய கீதமானது அலுவலக உத்தியோகத்தர்களினால் இசைக்கப்பட்டதனை தொடர்ந்து மத இறைவணக்கமும் நிகழ்த்தப்பட்டது. இராணுவ வீரர்கள் உட்பட தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூர்வதற்காக 02 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்  அனைத்து உத்தியோகத்தர்களாலும் இவ்வாண்டிற்கான உறுதிமொழி ஃ சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது. 

களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகரினால் கொவிட்- 19 தொற்றுப்பரவலை தடுப்பதற்காக பொதுமக்களுக்குள்ள பொறுப்புகளை வலியுறுத்தி சிறிய உரையொன்று நிகழ்த்தப்பட்டது.

கடந்த வருடத்தில் பிரதேச செயலகத்தின்  வெற்றிப்பயணத்துக்காக முன்னின்று உழைத்த மற்றும் திறமைகளை வெளிக்காட்டிய உத்தியோகத்தர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது . இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்இ பிரதி திட்டமிடல் பணிப்பாளர்இ கணக்காளர்இ நிருவாக உத்தியோகத்தர் உட்பட பதவிநிலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.