ஆரையம்பதியில் இடம்பெற்ற தொழில்நுட்பக் கல்லூரியின் 2022 கல்வியாண்டுக்கான மாணவர்களை இணைத்தல் தொடர்பான கருத்தரங்கு...!!


மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் 2022 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்களின் அனுமதி தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு நேற்று (24/01/2022) ஆரையம்பதியில் இடம்பெற்றது.

தொழிநுட்ப கல்லூரியின் தொழில் வழிகாட்டல் பிரிவின் ஏற்பாட்டில் ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரின் ஆதரவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , வெளிக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் மனித வள உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வினை நடாத்துவதற்கு பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் தனது பூரண ஒத்துழைப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.