மட்டக்களப்பு மாவட்டத்தில் இருதினங்களாக 185.8மில்லிமிற்றர் மழைகிடைத்துள்ளது.
தொடர்ச்சியாக இருதினங்களாக பெய்து வருகின்ற கனமழை இன்னும் இரு தினங்களுக்கு தொடரலாம் என எதிர்வு கூறப்படுகின்றது சமூக வலைத்தளங்களில் பொய்யான போலிதகவல்கள் பரப்பப்டுகின்றது. பொதுமக்கள் இத் தகவல்களை கன்டு பீதி கொள்ளத்தேவையில்லை உண்மையான தகவல்களை சம்பத்தப்பட்ட திணைக்களங்கள் மூலமாக உண்மை தகவல்களை அறிந்துகொள்வதை மக்களுக்கு நன்மையாகும்.
இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடக சத்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றுகையில் மாவட்டத்தில் எந்தவேரு பகுதியிலும் மக்கள் இடம் பேரவில்லை என்றும் கிரான் பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் கிரான் பாலத்தின் மேலாக நீர்பாய்வதனால் மக்களின் போக்குவரத்திற்கு இயந்திர படகுகள் மூன்று கடற்படையினரால் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது என குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து உரையாற்றிய நீர்பாசன பணிப்பாளர் பொறியியல்லாளர் ந.நாகரத்தினம் குறிப்பிடுகையில் பெரிய அளவிலான குளங்கள் மாவட்டத்தில் நான்கு உள்ளதாகவும் அதில் உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகளும் ஒரு அடிக்கு திறக்கப்பட்டு 800கனயடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் உறுகாம குளத்திலும் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டு 800 கனயடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் மற்றைய நவகிரி வாகனேரி ஆகிய இரு குளங்களும் நீர்மட்டம் சாதாரணமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அனர்த்த முகாமைத்துவ நிலைய மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் குறிப்பிடுகையில் வருடாந்த மழை வீழ்சியாக கடந்த வருடம் 1650.9மில்லி மிற்றர் கிடைக்கப்பெற்றது. இவ்வாண்டு ஐனவரி முதல் டிசம்பர் வரைக்கும் 2254.8 மில்லிமிற்றர் கிடைத்துள்ளதாகவும் கடந்த ஆண்டை விட 603.9மில்லிமிற்றர் அதிகமாக கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அனர்த்த காலங்களில் மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளை தொடர்வதற்கு முன்னாயித்தங்களுடன் உள்ளதாக குறிப்பிட்டார்.