தெரணியகல பிரதேசத்தில் 11 வயது சிறுமியொருவர், அவரது உடன்பிறந்த 15 வயது சகோதரனால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இந்த மாதம் 2ஆம் திகதி வீட்டில் யாரும் இல்லாததைப் பயன்படுத்திக்கொண்ட குறித்த சிறுவன், தனது சகோதரியை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளார்.
இந்த விடயத்தை அறிந்துக்கொண்ட உறவினரான அயல்வீட்டுப் பெண்ணொருவர், சிறுமியை அவிசாவளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதுடன், இதன்போது சிறுமி துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அன்றைய தினமே சிறுமியின் சகோதரன், தெரணியகல பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அலுவலகப் பிரிவினரால் அவிசாவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும், சிறுவனை இந்த மாதம் 24ஆம் திகதி வரை தந்தையின் பொறுப்பில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன், இது தொடர்பான வழக்கு இந்த மாதம் 24ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.