நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலைக்கு அலுவலக உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த அலுவலக உபகரணங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் உத்தியோகபூர்வ செயலாளரும், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் முகாமையாளருமான மதிமேனனினால் வழங்கி வைக்கப்பட்டன.