காணி பிரச்சினை- ஒருவர் அடித்து கொலை...!!


காணி பிரச்சினை காரணமாக இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் பொல்லால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலைச்செய்யப்பட்டுள்ளார்.

பல்லேவெல பிரதேசத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொலைச்செய்யப்பட்டவர் 70 வயதுடைய பல்லேவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரும் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடரிபில் பல்லேவெல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.