முச்சக்கர வண்டி திருட்டு சம்பவம் மூவர் கைது...!!


முச்சக்கர வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

420,000 ரூபா பெறுமதியான முச்சக்கர வண்டி ஒன்று கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு மருதானை பொலிஸ் நிலையத்தில் நேற்று (08) ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29, 30 மற்றும் 38 வயதுடைய கொழும்பு 14 மற்றும் பேலியகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று (09) ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.