மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அருகில் இருந்த வீடுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை 9 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.