நாட்டின் பல பகுதிகளில் அரை மணி நேரம் மின்சாரத் தடை ஏற்படும் என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது ஜெனரேட்டர் செயலிழந்துள்ளமையே இதற்கு காரணம் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மின் உற்பத்தி நிலையத்தின் கொதிகலன்களில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன, மின்தடையை மீட்பதற்காக தேசிய மின் அமைப்பில் இருந்து இரண்டாவது ஜெனரேட்டரை அகற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனால் எதிர்வரும் தினங்களில் மாலை 6.00 மணி முதல் இரவு 9.30 மணிவரையான காலப் பகுதியில் 30 நிமிடங்கள் மின் தடை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.