20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி...!!


நாட்டில் எதிர்காலத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் திலீப் லியனகே, 30 வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்களுக்கு தற்போது பூஸ்டர் டோஸ் வழங்கப்படுகின்றது என தெரிவித்தார்.

மேலும் “30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அதிகரிக்கப்பட்ட மருந்தளவை இரண்டு வாரங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரிட்டிஷ் இன்ஸ்டிடியூட் ஒஃப் ஹெல்த்கேர் ஆய்வில், ஒமிக்ரோன் கொரோனாவின் தொற்று அபாயத்தில் இருந்து தடுப்பூசி பாதுகாப்பை வழங்கும் என்று கூறுகிறது.

மூன்றாவது டோஸ் 75 சதவீதம் கொரோனா நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது என்றும் அவர்களின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.