ஜனாதிபதியின் கோட்டபாய ராஜபக்சவின் நாட்டினை உருவாக்கும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக தேசிய விளைத்திறனான பிரஜை மற்றும் மகிழ்ச்சியாக வாழும் குடும்பமொன்றின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி விசேட வாழ்வாதார தொழில் முயற்சி அபிவிருத்தி வேலைத்திட்டம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் 2021 ஆண்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் மனைப்பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் டிசம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 21 ஆம் திகதி வரை சமுர்த்தி சௌபாக்கியா வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு மாவட்டத்தின் சகல பிரதேச செயலக பிரிவுகளிலும் ஊக்குவிப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வ்ருகின்றன.
அந்தவகையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திணைக்களத்தின் சமுர்த்தி விசேட வாழ்வாதார தொழில் முயற்சி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் தெரிவு செய்யப்பட சமுர்த்தி பயனாளிகளுக்கான சுயதொழிலுக்கான வாழ்வாதார உபகரணங்கள், அதிஸ்டலாப சீட்டிழுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பயனாளியின் வீடு நிர்மாணிப்பதற்கான காசோலைகள் மற்றும் சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக தமது வாழ்க்கை தரத்தினை உயர்த்தி கொண்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி பொற்சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் புதன்கிழமை (15) நடைபெற்ற நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கே.பராமலிங்கம், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.அருணாகரன், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.