கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொப்பிகலை, மீயாங்கொல்ல காட்டுப் பகுதியிலிருந்து அதிசக்தி வாய்ந்த 130 மி.மீ பீரங்கிக் குண்டு மற்றும் நாட்டுத்துப்பாக்கி என்பன மீட்கப்பட்டுள்ளன.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினரோடு இணைந்து காகித ஆலை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் இவை மீட்கப்பட்டுள்ளன.