ரயிலில் மோதுண்டு குடும்பஸ்த்தர் பலி - திராய்மடு பகுதியில் சோகம்

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட திராய்மடு  பகுதியில்  இன்று அதிகாலை புகையிரத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு திராய்மடு மூன்றாம் குறுக்கு வீதியில் வசிக்கும் செல்லையா  அசோக்குமார் எனும் 43 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதிக்கு வந்த மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த அதேநேரம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் பணிப்புரைக்கு அமைய களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்டதுடன், விசாரணைகளை முன்னெடுத்து, பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்தும்படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு ள்ளதுடன்குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.