பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான பேரணிக்கு நீதிமன்றில் வழக்கு!

கடந்த 2021, பெப்ரவரி 3,ம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை ஆரம்பமான பேரணியில் கலந்து கொண்ட 32, தமீழ்தேசிய அரசியல் பிரமுகர்களுக்கான வழக்கு இன்று 17/12/2021, பொத்துவில் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

 இந்த வழக்கில் இன்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், த.கலையரசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்கள்பு மாநகரசபை உறுப்பினர்,தி.சரவணபவன், திருக்கோயில் நமிழரசு கட்சி உறுப்பினர் சயநொளிபவான், இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி்தலைவர் கி.சேயோன், வாலிபர் அணி உப்செயலாளர் நிதரன்சன், அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தலைவி திருமதி செல்வராணி, பிரதேச சபை உறுப்பினர் பிரதீபன் ஆகியோர் சமூகம் கொடுத்திருந்தனர். 

 ஏனையவர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை கிடையாமையால் இன்று பொத்துவில் நீதவான் நீதிமன்றில் சமூகம் கொடுக்கவில்லை. 

 இந்நிலையில் இன்று சமூகம் கொடுத்தவர்களுக்கு ரூபா ஐந்து இலட்சம் சுய பிணையில் செல்ல நீதவான் கட்டளை இட்டதுடன் எதிர்வரும் 2022, மார்ச்,2, ம் திகதி 32,பேரையும் மீண்டும் பொத்திவில் தீதிமன்றில் சமூகம் கொடுக்குமாறு உத்தவிட்டார். 

 இதேவேளை இன்றய வழக்கில் பொத்துவில் பொலிசாராலும், திருக்கோயில் பொலிசாராலும் தாக்கல் செய்யப்பட்ட்இரண்டு் வழக்குகள் 32, பேருக்கும் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.