மறு அறிவித்தல் வரை எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்...!!


நாடு முழுவதும் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

நேற்று (02) முதல் மறு அறிவித்தல் வரை இவ்வாறு எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ. கே. வேகபிடியவிடம் நாம் வினவிய போது, ​​நுகர்வோர் விவகார அதிகார சபையோ அல்லது அமைச்சோ அவ்வாறான எந்த அறிவித்தலையும் தமது நிறுவனத்திற்கு வழங்கவில்லையெனத் தெரிவித்தார்.

எனவே, தமது நிறுவனத்தின் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.